தயாசிறி CID இற்கு வருகை…

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வாக்குமூலமளிப்பதற்காக, குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சற்றுமுன்னர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

++++++++++++++++++++++++++(update)

தயாசிறி இன்று சி. ஐ. டி முன்னிலையில்…

பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றுக் கொண்டமை குறித்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இன்று(11) விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அர்ஜூன் அலோசியஸிடமிருந்து பெற்றுக் கொண்ட காசோலையை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் ஊடாக தயாசிறி மாற்றிக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடியினால் கிடைக்கப் பெற்ற பணத்தைக் கொண்டா அர்ஜூன் அலோசியஸ் இவ்வாறு, தயாசிறிக்கு பணம் வழங்கினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.