வட கொரியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து…

சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின் நிறைவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இருவரும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.

சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று டிரம்ப்- கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெற்றது. உலகமே உற்றுநோக்கிய இந்த சந்திப்பின்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்ததாகவும், மிகப்பெரிய பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

அதன்பின்னர், இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளது. இதில், டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் கையெழுத்திட்டனர்.