சிரியாவின் வடகிழக்கு பகுதியில் அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சிரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹசாகே மாகாணத்தில் அமெரிக்கா தலைமையிலான படையினர் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 10 பொதுமக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இட்லிப் மாகாணத்தின் பின்னிஷ், ராம் ஹம்தான், டப்தனாஸ் கிராமங்களை குறிவைத்து நேற்று முன்தினம் சிரிய அரசு படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 18 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிய அரசு படைகளின் இந்த வான்தாக்குதல் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்து உள்ளார். இட்லிப் மாகாணம் போர் நிறுத்த பகுதியாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அந்த ஒப்பந்தத்துக்கு உறுதியேற்றவர்கள், தங்கள் பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.