மற்றொரு பிரபல நடிகையின் வாழ்க்கை படமாக்க பேச்சுவார்த்தை…

மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கை படமாக்க சிலர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழில் முதல்வன், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் மனிஷா கொய்ராலா. இவர் சில வருடங்களுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றார்.

புற்றுநோய்க்காக அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் துணிச்சலாக நோயை எதிர்த்து போராடியதில் அதிலிருந்து மீண்டார்.

நோய் பாதிப்பிலிருந்தபோது நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தவர் சிகிச்சைக்கு பிறகு குணமாகி மீண்டும் நடிக்க வந்த மனிஷா தமிழில் “ஒரு மெல்லிய கோடு” படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்தியில் நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார்.

சஞ்சய்தத்தின் தாய் நர்கிஸ். இவர் புகழ்பெற்ற நடிகை. நர்கிஸ் கதாபாத்திரத்தைத்தான் தற்போது மனிஷா கொய்ராலா ஏற்றிருக்கிறார்.
நர்கிஸ் கதாபாத்திரத்துக்கான மேக் அப் அணிந்து மனிஷா தோன்றும் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் மனிஷாவிடம் ஒரு பட நிறுவனம், ‘உங்கள் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்க அனுமதி வேண்டும்’ என்றபோது அதற்கு, ‘இன்னும் காலங்கள் இருக்கிறது. அப்போது சொல்கிறேன்’ என்று பதில் அளித்தார்.

 

Related image