கௌதமாலா எரிமலை வெடிப்பு – விமான சேவை முடக்கம்…

கௌதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல் காரணமாக அங்குள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியதில் 110 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் காரணமாக அங்குள்ள விமான நிலையம் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

கௌதமாலாவில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளில் நலன்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஃப்யூகோ எரிமலை மீண்டும் வெடித்து சிதறலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.