மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் இன்று இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதியில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களுடன் காலி மாவட்டத்திலும் சில இடங்களில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதனுடன் ஊவா மாகாணத்துடன், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.