மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையிலான புகையிரத சேவைகள்…

மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையிலான புகையிரத பாதை நிர்மாணப் பணியின் முதல் கட்டத்தின் கீழ் புகையிரத சேவைகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் செயலாளர் ஜி.ஏ.எச்.விதானகே தெரிவித்தார்.

மாத்தறையில் இருந்து பெலியத்த வரையில் புகையிரத பாதையின் நிர்மாணப் பணிகள் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் செயலாளர் ஜி.ஏ.எச்.விதானகே தெரிவித்தார்.

இந்த புகையிரத பாதையின் அடுத்த கட்டத்தின் கீழ் பெலியத்தையில் இருந்து ஹம்பாந்தோட்டை, கதிர்காமம் ஊடாக மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் வரையில் பாதையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள. என்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் செயலாளர் ஜி.ஏ.எச்.விதானகே கூறினார்.