ஐக்கிய நாடுகள் சபையின் பொலிஸ் உயர் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர வெளிநாடு சென்றுள்ளார்.
இந்நிலையில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.