லிந்துலை நகரசபையின் தவிசாளர் உட்பட 8 பேருக்கும் பிணை…

சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தவிசாளர் அசோக்க சேபால உட்பட 8 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலா 10 லட்சம் ரூபா படி இரண்டு சரீர பிணைகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக, தெரிவிக்கப்படுகின்றது.

தலவாக்கலையில் 5 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 4 ஆம் திகதி சிறுமி கடத்தல் விவகாரம் தொடர்பில் தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.