பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் மத்திய தபால் பரிமாற்றத்தின் முன்னால் இன்று முற்பகல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
பல கேரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(20) 10 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
தமது தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஏனைய தொழிற்சங்கத்தினரின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று பிற்பகல் தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாக அந்த முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.