வாகன விபத்தில் குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு…

தெற்கு அதிவேக வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 65 கிலோமீற்றர் மைல் கல்லுக்கு அருகிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரும் 4 வயதுடைய குழந்தை ஒன்றுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.