FCID மீண்டும் ரவி வைத்தியலங்காரவின் கைக்கு…

பொலிஸ் நிதி மோசடிப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்காரவை மீண்டும் பதவிக்கு நியமித்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடிப் பிரிவின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் இதற்கு முன்னர் பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், அமைச்சரவை அனுமதிக்கு அமைய அவர் மீண்டும் நேற்று(19) குறித்த பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடிப் பிரிவின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.