முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்னவிடம் இன்று சீ.ஐ.டி விசாரணை…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்னவை இன்று(22) முற்­பகல் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையின் பின்னர் சாட்­சிகள் மாற்றப்பட்டமை, லசந்­தவின் குறிப்புப் புத்­தகம் காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பிலும் ஊட­க­வி­ய­லாளர் கீத் நொயார் கடத்தல், கொலை முயற்சி விவ­காரம் தொடர்­பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் வட்டாரத்து தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.