சைட்டம் மாணவர்களை கொத்தலாவல’வில் உட்சேர்க்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் 05 கோரிக்கைகள்…

சைட்டம் தனியார் பல்கலைக்கழக மாணவர்களை ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பான விசேட ஏற்பாடுகள் தொடர்பிலான சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில்   நிறைவேற்றப்பட்ட நிலையில், அதில் 05 விடயங்கள் உடனடியாக அரசினால் நிறைவேற்றப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.

அதன்படி,

01 /இலங்கை மருத்துவ சபையின் ஆலோசனைக் குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மருத்துவக் கல்விக்கான குறைந்தபட்ச தரநிலை பாராளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

02/ பல்கலைக்கழக சட்டத்தின் படி, உயர்கல்வி அமைச்சர் தலையிட்டு சைட்டம் நிறுவனத்தினை  இடைநிறுத்தி அதற்கான வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும்.

03/உட்சேர்க்கப்படும் மாணவர்களின் அடிப்படைத் தகுதிகள்  குறித்து மருத்துவ சபை கண்காணிக்க வேண்டும்.

04/கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டு மருத்துவ பட்டப்படிப்பைப் பெறக்கூடிய ஒரு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

05/திட்டமிட்ட அடிப்படை ஒன்றில் சைட்டம் மாணவர்களை கொத்தலாவல வைத்திய பீடத்திற்கு நுழைக்கும் கால அட்டவணை சட்டப்பூர்வ வெளியிடப்பட வேண்டும்.

 

என மேற்குறித்தவற்றினை குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.