ஜெர்மனி அடுக்குமாடி குடியிருப்பில் வெடி விபத்து…

ஜெர்மனி நாட்டின் உப்பர்ட்டால் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் காயமடைந்தனர்.

வெடி விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அருகாமையில் வசித்தவர்கள் உட்பட மொத்தம் 25 பேர் காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் காரணமாக சில வீடுகள் தீபிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பகுதியில் இடிபாடுக்குள்ளான அந்த அடுக்குமாடி கட்டிடம் முற்றிலுமாக இடிந்து விழுவதை தடுக்கும் நடவடிக்கையில் மீட்பு படையினரும், கட்டிட பொறியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.