இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் பல மாகாணங்களிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு , சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.

வடமத்திய மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஓரளவு மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

மத்திய , சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் , பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுமென திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு ,காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பிரதேசங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.