சுவிட்சர்லாந்தில் உள்ள சுகாதார அதிகாரிகள் பாதுகாப்பான உடலுறவினை மேம்படுத்துவதற்கான ஒரு புதிய வழியாக இலவச ஆணுறைகளுடன் பரிசுகளும் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த சில மாதங்களில் சுமார் 400,000 இலவச ஆணுறைகள் நீச்சல் குளங்கள், கிளப்புகள் மற்றும் விழாக்கள் ஆகியவற்றில் சுவிட்சர்லாந்தின் பாதுகாப்பான உடலுறவை மேம்படுத்தும் முயற்சிக்கு வைக்கப்படவுள்ளது.
இங்கு ஒரு திருப்பமும் இருக்கிறது. ஆணுறைகளை எடுக்கும் மக்கள், 3,500 பரிசு பொருட்களான lawnmower இல் இருந்து மிதிவண்டி அல்லது உணவு கூடைகள் வரையான பரிசுகளில் ஒன்றை வெல்ல முடியும்.
பரிசை வெல்ல Love Life வலைதளத்திற்கு சென்று, condom பாக்கெட்டில் உள்ள இலக்கத்தை பதிவு செய்ய வேண்டும். இந்த வலைதளத்தின் போட்டியின் படி condom களை பயன்படுத்துவோரே வெற்றியாளர்கள்.
எயிட்ஸ் நோயிலிருந்து விடுபடவே இந்த மாதிரியான முயற்சியை மேற்கொண்டுள்ளது என பொது சுகாதார சுவிஸ் மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.