மிக் விமானக் கொள்வனவு மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதால், அவர் இலங்கை திரும்பும் போது கைது செய்யப்படுவதை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பான அமைப்பொன்று நீதிமன்றத்தின் உதவியை நாளை(27) நாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதயங்க கைது செய்யப்படுவதை தடுப்பதற்கான நீதிமன்றத்தின் உத்தரைவை பெறுவதற்கு குறிப்பிட்ட அமைப்பு தீர்மானித்துள்ளது.
மிக் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பில் உதயங்கவிற்கு எதிராக இன்டர்போல் பிடியாணையை பிறப்பித்துள்ள நிலையிலேயே குறித்த இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.