எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் ஆரம்பம்…

எதிர்வரும் ஜுலை மாதம் 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை விபத்துத் தடுப்பு வாரம் அமுலாகும் என்று சுகாதார ஊக்குவிப்புப் பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

நாட்டில் இடம்பெறும் விபத்துக்களினால் வருடாந்தம் ஒன்பதாயிரம் பேர் உயிரிழக்கின்றனர் என சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் திலக் சிறிவர்தன தெரிவித்தார்.

அதேவேளை, நாளொன்றில் வாகன விபத்துக்களினால் 23 பேர் மரணிக்கிறார்கள்.

இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் சுமார் 1500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.