ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் 2020 ஜனவரி மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றவுள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதி தேர்தல் பற்றிய கருத்துக்கள் இப்போதே அரசியலில் முக்கிய கருப்பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் பற்றி சூடாக வாதிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் தேர்தல் சட்டம் இலங்கையில் மாற்றம் பெற்றிருப்பதால் அடுத்த முறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே…
ஆதலால், பொதுஜன மக்கள் முன்னணியின் சார்பில் அவரின் ஆசீர்வாதத்தோடு கோட்டாபய ராஜபக்ஷவை களமிறங்க உள்ளமையே இங்கு முக்கிய விடயமாக உள்ளது.
இந்நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியில் ஒரு வேட்பாளரும், ஐ.தே.கட்சியில் ஒரு வேட்பாளரும், மகிந்த அணியில் ஒரு வேட்பாளரும் களமிறங்க உள்ளனர்.
இதனால் மும்முனை போட்டி இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்ரீ கொத்தா அரசியல் வட்டாரத் தகவல்களின் படி, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த அணியில் கோட்டாபய இறங்கினால் ஐ.தே.க சார்பில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காராவை களமிறக்குவது என்ற ரணிலின் முடிவு தான் தற்போதைய அரசியலில் அரசியலில் அண்மைய பிரதான தலைப்பாக உள்ளது.
குமார் சங்கக்கார விளையாட்டு வீரனாக இருந்தாலும் அவர் இலங்கையில் சட்டமாணி பட்டம் பெற்ற ஒரு சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
குமார் சங்கக்காராவின் தந்தையும் கண்டி மாவட்டத்தில் பிரபல சட்டத்தரணி ஆவார் அத்தோடு அவர் கண்டி மாவட்ட ஐ.தே.கட்சியின் முக்கிய ஒரு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சங்கக்காராவின் தந்தை 83 ஆம் ஆண்டு கலவர நேரத்தில் பலநூறு தமிழர்களின் உயிர்களை காப்பாற்றி கண்டி தமிழர்களோடு மிக நெருக்கமான உறவு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.