விசேட சுற்றிவளைப்பில் நாடளாவிய ரீதியில் 2,322 பேர் கைது…

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது 2,322 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் 423 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும், மேலும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுமே என அறிவிக்கப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.