05 கேமரா மூலம் 2018 இல் கால் பாதிக்கும் LG புதிய Smart Phone…

ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட் போன்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், LG தொடர்ந்து வித்தியாசமான முடிவுகளின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
அந்த வகையில் LG’யின் V40 ஸ்மார்ட்போனில் ஐந்து கேமராக்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த LG V40 ஸ்மார்ட்போனில் 05 கேமராக்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான ஸ்மார்ட் போன்களில் வழங்கப்படுவதை விட இரு மடங்கு அதிகம் என்ற வகையில் LG தனது ஸ்மார்ட் போனின் பின்புறம் 03 கேமராக்களையும், முன்புறம் 02 கேமராக்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.