அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
பிரஸல்ஸில் நடைபெறவுள்ள நேடோ பேச்சுவார்த்தைக்கு பிறகு புதினுடனான தனது பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஃபின்லாந்து தலைநகர் எல்சின்கியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது சிரியாவின் போர் குறித்தும் யுக்ரைனில் நிலவும் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கு முன்பாக, வியட்நாமில் நவம்பர் மாதம் ஆசிய பசிபிக் சம்மேளனம் நடைபெற்றபோது டிரம்ப் புதின் சந்திப்பு நடைபெற்றது.
இருதலைவர்களுக்கும் இடையே நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை குறித்து புதன்கிழமையன்று ரஷ்ய வெளியுறவு கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவால் அறிவிக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் மற்றும் நேரம் இன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இருநாட்டு உறுவுகளையும் மேம்படுத்த இரு அதிபர்களும் விரும்புவதாக அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்தார்.