70 இலட்சம் பெறுமதியுடைய ஹெரோயின் உள்ளிட்ட சில போதைப்பொருட்களை இலங்கைக்கு கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
320 கிராம் ஹெரோயின், 52 கிராம் அயிஸ் போதைப்பொருள் மற்றும் 230 கிராம் ஹசீஸ் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு மேற்கொண்டு வருகின்றது.