மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபர் பகுதியில் இன்று திடீரென சிறிய ரக விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது
மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபர் பகுதியில் உள்ள ஜாக்ருதி கட்டிடத்தின் அருகே திடீரென சிறிய ரக விமானம் இன்று பிற்பகலில் நொறுங்கி விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 2 விமானிகள் 2 எஞ்சினீயர்கள் மற்றும் தரையில் இருந்த நபர் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.