சுமார் 40 மாணவர்களின் தாக்குதலில் கொழும்பின் பிரபல பாடசாலை மாணவன் ஆபத்தான நிலையில்…

கொழும்பு தேஸ்டன் கல்லூரி மாணவ தலைவர்கள் சிலர் உட்பட 40 மாணவர்கள் இணைந்து நேற்று(28) மாலை அதே பாடசாலை மாணவரை தாக்கியதில் குறித்த மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரக்பி போட்டியின் இடையில் ஏற்பட்ட விபத்து காரணமாக காயமடைந்துள்ளதாக கூறியே குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெற்ற பின் குறித்த மாணவன் வைத்தியசாலையில் இருந்து சென்றுள்ளார். எனினும் மீண்டும் நேற்று மாலை ஆபத்தான நிலைக்கு உள்ளானமையினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர கிசிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.