நைஜீரியாவில் எண்ணெய் பவுசர் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு…

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எண்ணெய் பவுசரில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் பவுசர் வீதியில் சென்று கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதையடுத்து பவுசரில் இருந்து எண்ணெய் வெளியே கசிய தொடங்கியதுடன், சிறிது நேரத்தில் தீப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீ அருகில் இருந்த வாகனங்களுக்கும் வேகமாக பரவியதுடன், இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 5 பேருந்துகள், 2 டிரக்கள் மற்றும் 45 கார்கள் தீக்கிரையாகியாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவுசரின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.