ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாய்ப்பளிக்க மறுத்துள்ளது
கடந்த ஜூலை 1ஆம் திகதி மகிந்த ராஜபக்சவின் மெதமுலான இல்லத்தில் நடைபெற்ற மகிந்த ஆதரவுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ச, தாம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மொனராகல மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்தார்.
எனினும், இம்முறை மொனாராகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவில் அவரது பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.
அதேவேளை, அவரது தந்தை சமல் ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்ட முதன்மை வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் நிறுத்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(riz)