STF உதவியுடன் “தீகதந்து” கண்டுபிடிக்கப்பட்டது…

கலா வாவி தேசிய பூங்காவில் வாழ்ந்து, கடந்த 10 தினங்களாகக் காணாமற் போயிருந்த, நீண்ட தந்தங்களையுடைய “தீகதந்து” எனப்படும் பிரசித்த யானை, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால், நேற்று(28) கண்டுபிக்கப்பட்டது.

கஹாகல்ல காட்டுப் பகுதியில் வைத்து, குறித்த யானை கண்டுபிடிக்கப்பட்டதாக, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து, சிகிச்சைப் வழங்கப்பட்டு வந்த நிலையில் காணாமற்போன மேற்படி யானையைத் தேடி, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துவரும் செயற்பாட்டிற்கு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு, நேற்றுப் பெறப்பட்டடிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.