பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலருடன் கலந்துகொண்ட சுருதி…

கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன், அவரது காதலர் என இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தில் இடம்பெற்ற ‘ஞாபகம் வருகிறதா’ பாடல் வெளியிடப்பட்டது.

“சினிமாவை விட்டுவிட்டு முழுநேர அரசியலுக்கு செல்ல வேண்டாம்” என்று கமலிடம் இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களில் ஒருவர் கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதில் அளித்து கமல்: நான் சினிமாவை விட்டு விலகி போகமாட்டேன். நடித்தால்தான் சினிமாவா? உங்களில் ‘ஒருவனாக’ அமர்ந்து சினிமாவை பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். அதை விடவும் ஒரு பெரிய பணியில் ஈடுபட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த விஸ்வரூபம் 2 பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சுருதிஹாசனின் காதலர் மைக்கேலும் கலந்துகொண்டார். சுருதிஹாசனும் லண்டனை சேர்ந்த நடிகரான மைக்கேல் கார்சலும் காதலித்து வருவதாகவும், அவர்கள் காதலுக்கு கமல்ஹாசன் சரிகா இருவருமே சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் செய்தி வந்தது.

இந்தநிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த பாடல் வெளியீட்டில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். ஸ்ருதிஹாசன் மேடையில் பாடலும் பாடியுள்ளார்.