விடுதலை புலிகள் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் விடுதலை புலிகள் இருந்த காலத்தில் அதிக சுதந்திரமான வாழ முடிந்ததாகவும் நேற்று(02) விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பெரும் சர்ச்சை மேலெழுந்துள்ளது.
அமைச்சர் விஜயகலா கருத்து வெளியிட்ட நிகழ்வில் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் கலந்து கொண்டுள்ளார். குறித்த இந்த கருத்து தொடர்பில் அமைச்சர் வஜிரவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது,
“விஜயகலா சிறுவர் விவகாரங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சராக செயற்படுகின்றார். இதனால் யாழில் சிறுமி கொல்லப்பட்ட விடயத்தில் அவர் மிகவும் வருத்தமாக இருந்தார். விடுதலை புலிகள் இருந்த காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலையாளி கொல்லப்படுவார். எனவே அவ்வாறான சமூக பொறிமுறை ஒன்று அவசியம் என்று கூறவில்லை. இவ்வாறான சம்பவங்களுக்கு சட்டத்தை செயற்படுத்த வேண்டும் என கூறவே அவர் முயற்சித்தார்” என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.