தாய்லாந்தில் மலைக்குகைக்குள் சிக்கிய இளம் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் அனைவரும் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 23-ம் திகதி தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள தாம் லுவாங் மலைப்பகுதியில், 12 கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டனர். அப்போது, மலைப்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக 13 பேரும் அங்குள்ள குகை ஒன்றில் ஒதுங்கியுள்ளனர்.
அதன் பின்னர், அவர்கள் அங்கிருந்து திரும்பவில்லை. வெள்ளம் காரணமாக அவர்கள் குகைக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து இராணுவம் தீவிரமாக ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 நாட்களுக்குப் பிறகு அனைவரும் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்ட தகவல், உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
சிறுவர்கள் இருக்கும் இடம் தெரியவந்ததையடுத்து, மேலும் பலர் குகைக்குள் சென்று அவர்களை இன்று அழைத்து வருவார்கள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.