முதல் முறையாக சூர்யா, கார்த்தி இணைந்து பாடிய பாடல்…

வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா மற்றும் கார்த்தி பாடியுள்ள ‘பார்ட்டி’ படத்தின் சாரே பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `பார்ட்டி’. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கேசன்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளர். நடிகர் ஷாம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார்.

இப்படத்தின் அறிமுக பாடலான ‘ச்சா ச்சா சாரே…’ எனத் தொடங்கும் பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.

சூர்யா மற்றும் கார்த்தி முதல் முறையாக இணைந்து பாடியிருக்கிறார்கள். மேலும் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, கரீஷ்மா ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

ஒரு ஜாலியான பெப்பி வரிசையில் பார்ட்டி கொண்டாடும் வகையில் இந்த பாடல் பாடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.