நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் வௌியான கட்டுரை தொடர்பில் ஏதாவது பிரச்சினை காணப்படுமாயின் , இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை விடுத்து நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் சிரேஷ்ட செய்தி ஆசிரியர்களை தொடர்பு கொண்டு வினவுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.