திடீர்விபத்து காரணமாக நாளாந்தம் 5,000 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் நாளாந்த விபத்துகளில் 25 பேர் உயிரிழப்பதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றாநோய்ப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
வீட்டில் மற்றும் வீதி விபத்துகளின் மூலமே அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.
விபத்துகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படும் பட்சத்தில் விபத்துகளைக் குறைத்துக்கொள்ள முடியும் எனவும் வாகனங்கள் செலுத்தும்போது அவதானத்துடன் செயற்படுமாறும் வைத்தியர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் 18 இலட்சம் பேர் வீதி விபத்துக்களுக்குள்ளாகி சிகிச்சை பெறுவதாகவும் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.