யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளதும் விடுமுறைகள் இன்று(04) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா காரியாலயம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக வாள்வீச்சு வெட்டுக்கள் அதிகளவு இடம்பெறும் நிலையிலேயே குறித்த நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.