ஹிக்கடுவை, தொடகமுவ பிரதேசத்தினை வசிப்பிடமாகக் கொண்டுள்ள மீனவர்கள் 07பேருடன் சென்ற மீன்பிடி கப்பல் ஒன்று சுமார் ஒரு வார காலமாக காணாமல் போயுள்ளதாக குறித்த கப்பலின் உரிமையாளரான ஹிக்கடுவை, தெல்வத்த எம்.டப்ளியு.ரொஹான் மனோஜ் தெரிவிக்கிறார்.
குறித்த மீன்பிடி கப்பல் காணாமல் போயுள்ளதாக தான் மீன் பிடித்துறை அமைச்சு மற்றும் கடற்படையினருக்கு அறிவித்திருந்தாகவும் தெரிவித்திருந்தார்.
குறித்த கப்பல் ஜூன் மாதம் 14ம் திகதி காலை 01.30 காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பித்ததாகவும் ஜூன் 29ம் திகதி காலை 05 மணி வரையில் தொடர்புகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
அதன்பிற்பாடு எவ்வித தொடர்புகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.