கிரிவெஹர துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்…

கிரிவெஹர ரஜமஹா விகாரையின் விகாராதிபதி மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 07 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நேற்று(04) திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.