புத்தளம் ஆராச்சிக்கட்டுப் பகுதியி்ல் மதிலொன்றை உடைத்துக் கொண்டு வீடொன்றுக்குள் சென்று விபத்துக்குள்ளாகிய சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவினது வழக்கினை எதிர்வரும் 24ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சிலாபம் நீதவான் நீதிமன்றம் இன்று(05) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஜூன்08ம் திகதி கைது கைது செய்யப்பட்ட அவர், 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து, ரூபா 50,000 சரீரப் பிணையில் விடுதலை விடுதலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.