இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் முன்னாள் இடைக்கால குழு தலைவர்களால் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால மற்றும் அவரது தரப்பினருக்கு எதிராக கடந்த 19ம் திகதி விளையாட்டு அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பினை வழங்குமாறு கோரி நேற்று(04) அமைச்சருக்கு கடிதம் ஒன்றினை கையளித்துள்ளனர்.
இம்மாதம் முதலாம் திகதி தயாரிக்கப்பட்ட குறித்த கடிதத்தில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால, முன்னாள் துணைத் தலைவர்களான மொஹான் டி சில்வா, கே.மதிவானன், முன்னாள் செயலாளர் ரொஷான் பியன்வல மற்றும் பொருளாளர் ஷம்மி சில்வா ஆகியோரால் கையொப்பமிடப்பட்டு, நேற்று(04) பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் விளையாட்டு அமைச்சரிடம் கையளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma