விவாகரத்து பெற்ற விஜய்க்கு 2-வது திருமணம்…

நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த இயக்குனர் விஜய்க்கு விரைவில் 2-வது திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் பட உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஏ.எல்.விஜய். இவர் தலைவா, கிரீடம், தாண்டவம், தெய்வத்திருமகள், மதராச பட்டினம், வனமகன் மற்றும் சைவம், இது என்ன மயக்கம், தேவி, தியா ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

இப்போது பிரபுதேவா நடிக்கும் லட்சுமி, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். விஜய்க்கும் பிரபல நடிகை அமலாபாலுக்கும் காதல் மலர்ந்து 2014-ல் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இரண்டு வருடங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

விஜய்க்கு 2-வது திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் விரும்பினர். அதற்கு இத்தனை நாட்களாக மறுத்து வந்த இயக்குனர் விஜய் இப்போது சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

மணப்பெண்ணை தேர்வு செய்யும் படலம் தீவிரமாக நடக்கிறது. விஜய்க்கு விரைவில் 2-வது திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்பாக அவர் கைவசம் உள்ள 2 படங்களையும் வேகமாக முடிக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளார்.

Image result for a.l vijay