கொட்டாஞ்சேனை பகுதியில் போக்குவரத்து மட்டு…

நீர் குழாய்கள் பராமரிப்பு காரணமாக கொட்டாஞ்சேனை – ஹெட்டியாவத்த தொடக்கம் இப்பகேவத்த சந்தி வரையில் வாகன போக்குவரத்து நாளை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை(06) இரவு 9 மணி தொடக்கம் எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.