இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் இத்தொழிற்துறையில் உள்ளவர்களும் வர்த்தகர்களும் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கபடுகின்றது.
தங்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கு 15 வீத இறக்குமதி வரி மற்றும் ஆபரண தொழிற்துறையில் அதன் மோசமான பிரதிபலிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
தேசிய இரத்தினக்கற்கள் ஆபரண அதிகார சபையின் சில முன்மொழிவுகளும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரத்தினக்கல் அகழ்விற்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது அரச நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தாமதம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இரத்தினக்கல் அகழ்விற்கு காணிகளை விடுவிக்கும்போது அரச நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்ட கம்பனிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த பிரச்சினைகளில் தற்போது தீர்வுகளை வழங்கக் கூடிய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜூலை மாதம் 12ஆம் திகதி மீண்டும் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு ஆலோசனை வழங்கினார்.