முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் எதிர்காலமற்றவர் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா கருத்து தெரிவிக்கையில், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பதால், ராஜபக்ஷ அச்சத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியமற்றது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்
(riz)