தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான யாழ்ப்பாண கோட்டைக் காணியை இராணுவத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்கு இராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தியும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று எதிர்வரும் 08ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கோட்டையின் தெற்குவாசல் பக்கமாக நடைபெறவுள்ளது.
குறித்த இராணுவ முகாம் அமைப்பதால், தொல்பொருளியல் விதிகளை மீறுவதாகவும், வடக்கில் நிரந்தரமான இராணுவ பிரசன்னத்தை நிலைநிறுத்தும் இந்த திட்டத்துக்கு பலரும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.