கிழக்கு மாகாண ஆளுநர் இல்லத்திற்கு அருகில் நேற்று(05) இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு லவ் லேனிலுள்ள கிழக்கு மாகாண ஆளுனரின் விடுதிக் கட்டிடத்திற்கு அருகாமையிலுள்ள வாகனத்தரிப்பிட வளவு சுத்தம் செய்து கொண்டிருந்த போது இந்தக் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் விஷேட அதிரடிப்படையினர் அக்கைக் குண்டுகள் இரண்டையும் மீட்டுள்ளனர்.
குறித்த இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.