நேற்று(05) அதிகாலை எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.