விஜயகலாவின் கருத்து தொடர்பில் ஆராய ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மூவர் கொண்ட குழு நியமனம்…

சிறுவர் மற்றும் மகளிர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் ஆராய, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களான தலதா அதுகொரல, அகில விராஜ் காரியவசம் மற்றும் கபீர் ஹஷீம் ஆகியோர் உள்ளடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.