பாடகி ப்ரியானி ஜயசிங்கவின் கணவன் கைது…

பாடகி ப்ரியானி ஜயசிங்க கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது கணவர் பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

+++++++++++++++++++++ UPDATE  @2018/07/08 @09.50PM

பாடகி ப்ரியானி ஜயசிங்க கொலை – அவரது கணவரைக் கைது செய்ய நடவடிக்கை…

பாடகி ப்ரியானி ஜயசிங்க கொலை தொடர்பில் அவரது கணவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

நேற்றிரவு(௦8) கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரை கொலை செய்ததன் பின்னர், சந்தேகநபரான கணவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.