ஹெரோயின் 4 கிலோகிராமுடன் பாகிஸ்தான் பிரஜை கைது…

50 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைபொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து சுமார் 4 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.